கொங்கோ நாட்டில் அதிகரிக்கும் வன்முறை: 16 பேர் கொல்லப்பட்டுள்ளதோடு 20 பேர் கடத்தப்பட்டுள்ளனர்.
கொங்கோ நாட்டில் வெடித்த வன்முறையால் 16 பேர் உயிரிழந்துள்ளனர். ஆபிரிக்காவின் மக்களாட்சி குடியரசு நாடு கொங்கோவில், கின்ஷாசா கிராமத்தில் தீவிரவாதக் கொள்கைகளைக் கொண்டவர்கள் மற்றும் உள்ளூர் கிளர்ச்சியாளர்களால் கடந்த மூன்று நாட்களாக வன்முறைத் தாக்குதல் நடைபெற்று வருகின்றன.
கொங்கோ நாட்டிலுள்ள கிராமங்களின் அதிகாரங்களை தன்வசப்படுத்தவும் கனிம வளங்களை சுரண்டுதலையும் நோக்காகக் கொண்டு இந்த வன்முறைச் சம்பவம் நடைபெற்று வருகின்றன.
கடந்த புதன்கிழமை முதல் நேற்று வெள்ளிக்கிழமை வரையில் இடம்பெற்ற தாக்குதலில் 16 பேர் கொல்லப்பட்டுள்ளதோடு, 20 பேர் கடத்தப்பட்டுள்ளனர்.
கடத்தப்பட்டவர்களின் நிலைகுறித்து இதுவரையில் எதுவும் தெரிய வராததால் உயிரிழப்புக்கள் மேலும் அதிகரிக்கலாம் என கூறப்படுகிறது.
மத்திய ஆபிரிக்க நாடு முழுவதும் இடம்பெற்றுவரும் இந்த தாக்குதல் மிகப்பெரிய மனிதாபிமான நெருக்கடிகளில் ஒன்றாக பார்க்கப்படுகின்றது.