அமெரிக்க மக்களை கவரும் கமலா ஹாரிஸ்; புதிய திட்டத்தால் அதிகரிக்கும் மக்களின் எதிர்பார்ப்பு

அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் தமது பொருளியல் கொள்கையின் ஓர் அம்சமாக முதல் முறையாக வீடு வாங்குவோருக்கு 25,000அமெரிக்க டொலர் நிதி உதவி வழங்கும் திட்டத்தை முன்மொழிய உள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

ஏறுமுகமாக உள்ள வீட்டு விலைகளால் அமெரிக்க மக்கள் அதிருப்தி அடைந்துள்ளது தமக்கு மிகப் பெரிய அரசியல் சவால்களில் ஒன்றாக விளங்குவதை இதன் மூலம் அவர் ஒப்புக்கொண்டுள்ளார் என செய்திகள் தெரிவிக்கின்றன.

அவரது இத் திட்டத்தின்படி, தாங்கள் குடியிருக்கும் வீட்டு வாடகையை குறித்த நேரத்தில் ஈராண்டுகளுக்கு கட்டும் முதல் முறை வீடு வாங்க எண்ணுவோர், இந்த வீடு வாங்கத் தேவைப்படும் வைப்புத் தொகை ஆதரவு பெற தகுதியுடையவர் ஆவர். இதைத் கமலா ஹாரிஸ் தமது தேர்தல் பிரசாரத்தில் தெரிவிக்க உள்ளதாகவும் குறித்த செய்திகள் தெரிவிக்கின்றன.

முன்னதாக, ஜனாதிபதி ஜோ பைடன் ஜனாதிபதி என்ற முறையில் நாட்டு மக்களுக்கு தாம் ஆற்றிய உரையில், முதல் முறையாக வீடு வாங்குவோருக்கு 10,000அமெரிக்க டொலர் வரிச் சலுகையாக வழங்கும் திட்டம் ஒன்றை அறிவித்தார். அத்துடன், சொந்த வீடில்லாதவர்களின் பிள்ளைகளுக்கு மேலும் சலுகைகள் பெறும் திட்டத்தையும் ஜோ பைடன் அறிவித்திருந்தார்.

பைடன் அறிவித்த மேற்கண்ட திட்டத்தின் பரந்த விரிவாக்க திட்டமாக ஹாரிசின் திட்டம் வர்ணிக்கப்படுகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *