இ.போ.ச சொத்துக்களை துஷ்பிரயோகம் செய்யும் ரணில்?: ஊழியர்கள் கேள்வி

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது தேர்தல் பிரச்சாரங்களுக்காக இலங்கை போக்குவரத்து சபையின் சொத்துக்களை துஷ்பிரயோகம் செய்து வருவதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இன்று (15) வேட்புமனு தாக்கல் செய்யும் சந்தர்ப்பத்தில் ஆதரவாளர்களாக, இலங்கை போக்குவரத்து சபையின் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் அந்த பேருந்துகளில் பயணம் செய்துள்ளனர்.

அதன்படி, இன்று ஹொரணை டிபோவுக்கு சொந்தமான NB 6182 என்ற பேருந்தில் அதன் உதவி முகாமையாளர் உட்பட 15 ஊழியர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர்.

அண்மைய நாட்களில் இடம்பெற்று வரும் டிப்போ ஊழியர்களின் வருடாந்த சம்மேளனத்தில் ஊழியர்களுக்கு பங்குபற்ற தேர்தல் சட்டங்களை உயர்த்தி டிப்போ பேருந்துகளை வழங்காத இலங்கை போக்குவரத்து சபை தலைவர் இவ்வாறு ஜனாதிபதி வேட்பாளர் ஒருவருக்கு செயற்படுவது தொடர்பில் ஊழியர்கள் விசனம் தெரிவித்து வருகின்றனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button