கொழும்பில் இருந்து “றோ“ டில்லிக்கு அனுப்பிய செய்தி; இலங்கை அரசியலில் என்ன நடக்கிறது?
இலங்கையில் ஜனாதிபதித் தேர்தலுக்கான களம் சூடுபிடித்துள்ளது. கூட்டணி பேரங்களும், கட்சித் தாவல்களும் நாளுக்கு நாள் அரங்கேற்றப்பட்டு வருகின்றன.
இந்த பின்புலத்தில் இந்தத் தேர்தல் இந்தியாவுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தேர்தலாக இருப்பதாக அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
தேர்தலை உற்றுநோக்கியவரும் புதுடில்லி, ரகசிய காய்களை நகர்த்தி வருவதாக தெரியவருகிறது.
கடந்த பல மாதங்களுக்கு முன்னர் தேசிய மக்கள் சக்திக்கு இலங்கைத் தீவில் இருந்த எழுச்சியை பார்த்து அதன் தலைவர் அனுரகுமார திஸாநாயக்கவை புதுடில்லி அழைத்துடன், சிவப்பு கம்பள வரவேற்பையும் அளித்திருந்தது.
ஆனால், பின்னர் தேசிய மக்கள் சக்தியை ஆட்சிக்கட்டிலில் அமர்த்தும் நகர்வை டில்லி கைவிட்டுவிட்டது.
அனுரகுமார திஸாநாயக்க தேர்தலில் வெற்றிபெற்றுவிட்டால் அவர், தற்போதைய ஜனாதிகதி ரணில் விக்ரமசிங்கவைவிட மோசமாக அதிகாரங்களை கையாளக் கூடியவராக இருப்பார் என கொழும்பிலில் இருந்து இந்திய புலனாய்வு துறையான “றோ“ தகவல்களை அனுப்பியதன் பிரகாரம் தற்போது புதுடில்லி அனுர தொடர்பான தமது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டுள்ளது.
அதன் பின்னரே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுடன் இந்தியா, பேச்சுகளை நடத்தியதாகவும் தற்போது சஜித்தை ஆட்சிக்கு கொண்டுவரும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.
ரணில் மிகவும் ஆபத்தான நபர் என்பதை டில்லி உணர்ந்துள்ளமையாலேயே ஜனாதிபதித் தேர்தலில் அவருடன் எவ்வித பேச்சுகளிலும் ஈடுபடவில்லை என்பதுடன்,ரணில் வெற்றிபெற்றால் அவருடன் இராஜதந்திர ரீதியில் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடும் நகர்வுகளிலும் இந்தியா ஈடுபட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.
பலம்பெரும் அரசியல்வாதியாக ரணிலுக்கு அரசியல் சூழ்நிலைகளை அவருக்குச் சாதகமாக உருவாக்கிக்கொள்ளும் உத்திகள் நன்குத் தெரியும் என்பதால வல்லரசு நாடுகளின் நிபந்தனைகளுக்கு கட்டுப்பட மாட்டார் என்பதை இந்தியா உணர்த்திருப்பதால் சஜித்தை வெற்றிபெற செய்யும் முயற்சியில் டில்லி ஈடுபட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.