பிரித்தானிய வன்முறை; ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது
பிரித்தானியாவில் இடம்பெற்ற வன்முறைகளால் இதுவரை 1000 இற்கும் மேற்பட்டோர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கடந்த மாதம் 29 ஆம் திகதி பிரித்தானியாவில் இடம்பெற்ற கத்திக்குத் தாக்குதலின் போது சிறுமிகள் மூவர் உயிரிழந்தனர்.
தாக்குதல் மேற்கொண்ட சந்தேக நபர் முஸ்லீம் என்றும் புலம்பெயர்ந்தவர் என்றும் வெளியான கருத்துத்தை தொடர்ந்து வன்முறை வெடித்தது.
இங்கிலாந்து மற்றும் வடக்கு அயர்லாந்தில் உள்ள நகரங்களிலேயே வன்முறை வெடித்தது.
இந்நிலையில் பலர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதுடன் மேலும் சிலருக்கு தண்டனைகளும் வழங்கப்பட்டுள்ளன.
தீவிர வலதுசாரி இனக் கலவரங்கள், பல நகரங்களில் திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின. இனவெறி கும்பல் சுமார் 30 இடங்களை குறிவைக்கக்கூடும் என தீவிர வலதுசாரி தகவல்தொடர்புகளை கண்காணிக்கும் ஆர்வலர்கள் அண்மையில் அச்சம் வெளியிட்டிருந்தனர்.
எவ்வாறாயினும் தற்போது வன்முறை சம்பவங்கள் குறைவடைந்துள்ளதாக கூறப்படுகின்றது.