ஜனாதிபதி தேர்தலில் இருந்து நாமல் வெளியேறுகிறாரா?
ஜனாதிபதித் தேர்தல்கள யுத்தம் மிகவும் சூடுபிடித்துள்ளதுடன், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிற்கும் இடையில் கடும் போட்டி நிலவுவதாக பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்க கூறுகிறார்.
எமது சகோதர ஊடகமான ”மொனரா” செய்திச் சேவைக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும், சிறீலங்கா பொதுஜன பெரமுன கட்சியில் இருந்து ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் முன்னாள் ஜனாதிபதியின் புதல்வர் நாமல் ராஜபக்ச, கடைசி நேரத்தில் வேட்புமனுவை சமர்ப்பிக்காமல் ஜனாதிபதி தேர்தலில் இருந்து வெளியேறலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) பொதுச் செயலாளர் சாகர காரியவசம் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் சார்பில் கட்டுப்பணம் செலுத்தியுள்ளார் என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.
2024 ஜனாதிபதித் தேர்தலுக்காக இதுவரை மொத்தம் 37 வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதேவேளை, ஜனாதிபதித் தேர்தலுக்கான கட்டுப்பணத்தை செலுத்துவதற்கான காலம் நிறைவடையவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.