கேரளாவில் ஏற்பட்ட மிக மோசமான பேரிடர்; மனித மண்டை ஓடுகள், உடல் பாகங்கள் மீட்பு
கேரளா, வயநாட்டில் கடந்த ஜூலை 30ஆம் திகதி கொட்டித் தீர்த்த கனமழையினால் ஏற்பட்ட மண்சரிவில் சூரல்மலை, முண்டக்கை, அட்டமலை உள்ளிட்ட கிராமங்கள் முற்றாக பாதிக்கப்பட்டன.
இந்த மண்சரிவு பல உயிர்ச்சேதங்களை ஏற்படுத்தியதோடு கேரளாவில் ஏற்பட்ட மிக மோசமான இயற்கை பேரிடரில் ஒன்றாக கருதப்படுகிறது.
இதனையடுத்து தொடர்ந்தும் இன்று 15ஆவது நாளாக காணாமல் போனவர்களை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் நேற்று திங்கட்கிழமை கெட்டுப்பாறை, இருட்டுக்குத்தி பகுதிகளில் தலா ஒரு உடல் என இரண்டு உடல்கள் கண்டறியப்பட்டுள்ளன.
சூச்சிப்பாறை நீர்வீழ்ச்சிக்கருகில் மனித மண்டை ஓடு மற்றும் உடல் பாகங்கள் மீட்கப்பட்டுள்ளன.
மோசமான வானிலையின் காரணமாக தேடுதல் பணி கடினமாக உள்ளதாக மீட்புக் குழுவினர் தெரிவித்துள்ளதோடு, இதுவரையில் வயநாடு மண்சரிவில் சிக்கி சுமார் 420க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.