பாகிஸ்தானில் பொருளாதார நெருக்கடியின் தாக்கம் மேலும் அதிகாிப்பு – ஆய்வில் தகவல்!
பாகிஸ்தானில் 10 சதவீதத்தினர், வருவாயை ஈடு கட்டும் வகையில் பகுதிநேர வேலைகளில் ஈடுபட்டு வருவதாக ஆய்வு அறிக்கை ஒன்று தெரிவிக்கின்றது.
பாகிஸ்தான் மக்கள் தொகை ஏறக்குறைய 24 கோடியாக உள்ளதுடன், அவர்களில் பலர் செலவுக்கு வழியின்றி தவித்து வரும் சூழல் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
56 சதவீத மக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு செலவிட்ட பின்னர் சேமிப்பதற்கு முடியாத சூழலில் உள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வரும் அந்த நாட்டில், கடந்த ஆண்டில் நிதி நெருக்கடியில் சிக்கி தவித்து வருபவர்களின் எண்ணிக்கை 14 சதவீத நகரவாசிகள் என்ற அளவில் அதிகரித்து உள்ளது.
இதன் விளைவால், நாட்டின் நகர மக்கள் தொகையில் 74 சதவீதம் பேர், அவர்கள் பெறும் வருவாயை வைத்து கொண்டு மாத செலவுகளை கூட எதிர்கொள்ள முடியவில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு மே மாதத்தில் 60 சதவீதம் என்ற அளவில் இந்த எண்ணிக்கை இருந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இது நடப்பு ஆண்டில் 74 சதவீதம் என அதிகரிப்பு எனவும் இதனால், மளிகை பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய செலவுகளை கூட அவர்கள் நிறுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, 40 சதவீதத்தினர் நெருங்கியவர்களிடம் இருந்து கடன் வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதுடன், 10 சதவீதத்தினர், வருவாயை ஈடு கட்டும் வகையில் பகுதிநேர வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர் என அந்த அறிக்கை மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.