மகிந்த, பசில், நாமலுக்கு அதிர்ச்சி: உருவாகும் புதிய கட்சி
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளித்துள்ள ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு புதிய அரசியல் கட்சியொன்றை உருவாக்க திட்டமிட்டுள்ளது.
உள்ளுராட்சி மன்றங்களின் முன்னாள் தலைவர்கள் கலந்துகொண்ட நிகழ்வில் உரையாற்றும் போதே நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே இந்த விடயத்தை வலியுறுத்தினார்.
தமக்கு ஆதரவளிக்க முன்வந்துள்ள மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களின் முன்னாள் மக்கள் பிரதிநிதிகளுக்கு நன்றித் தெரிவிப்பதாகவும் அனைத்து மக்களின் அரசியல் எதிர்காலத்தைப் பாதுகாப்பதற்கு தாம் பாடுபடவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இது குறித்து அடுத்த வாரம் அறிவிக்கப்படும் என்றும் அதற்குத் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் சிறிலங்கா பொதுஜன பெரமுன சார்ப்பில் நாடாளுமன்றத்துக்கு தெரிவாகியிருந்த 92 நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவை ஆதரிப்பதாக அறிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.