“வெப்பம் தாங்காமல் என் குழந்தைகள் அழுகிறார்கள்“; காசாவில் இன்னலுறும் தாயின் பரிதவிப்பு
காசா பகுதியில் கடந்த சில வாரங்களாக அதிகமான வெப்பம் நிலவிவருகின்றது. இதனால் அங்கு வாழும் மக்கள் பெரும் சிரமத்துக்கு உள்ளாகி வருவதாக அங்கிருந்து செய்தி சேகரிக்கும் ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இவ்வாறு தான் அங்கு பாதிக்கப்பட்ட ஒரு குடும்பத்துடனான சந்திப்பின் போது ஏற்பட்ட அனுபவங்களை அல்ஜசீரா செய்தியாக வெளியிட்டுள்ளது.
இதனடிப்படையில், ஒரு நாட்டின் யுத்தம் அல்லது போர் சூழ்நிலையில், மக்கள் படும் கஸ்டங்கள் தொடர்பில் அனைவரும் அறிந்திருப்பது அவசியம். அந்தவகையில் தான் நிமாஹ் எலன் எனும் குடும்பத் தலைவி படும் கஸ்டங்கள் தொடர்பில் வெளிக்கொணரப்பட்டுள்ளது.
என்னுடைய குழந்தைகள் வெப்பம் தாங்க முடியாமல் அழுகிறார்கள் – காசா கூடார வாழ்க்கையின் சோக நிலைமை தொடர்பில் காசாவில் தாய்மார் படும் வேதனைகளை பகிர்ந்து கொண்ட தருணமாக அது அமைந்துள்ளது.
மாலை 7.30 மணியிருக்கும் சூரியன் கொஞ்சம் கொஞ்சமாய் மறையும் வேளை. நிமாஹ் எலனும் அவருடைய 4 குழந்தைகளும் வீடு திரும்புகின்றனர்.
தினமும் நிலவும் கடுமையான வெப்பம் காரணமாக அவளுடைய குழந்தைகளை கடலுக்கு நீராட போகச்சொல்கின்றார். அவர்களின் தோல்களில் காணப்படும் எரிச்சல் காரணமாக குழந்தைகள் அழுகிறார்கள். நிமாவும் செய்வதறியாது தவிக்கின்றார்.
இதனால் அவர்களுக்கு உடலில் தளும்புகளுடனான நோய் நிலை ஏற்படுகின்றது.
அவர்கள் குளிப்பதற்கும் குடிப்பதற்கும் பயன்படுத்தும் தண்ணீரை அருகில் உள்ள மருத்துவமனையில் இருந்து அவரது குழந்தைகள் சேகரிக்கின்றனர்.
“ஒவ்வொரு நாளும் காலை 11 மணியளவில், வானிலை தாங்க முடியாததாக மாறும் போது, நாங்கள் கழுதை வண்டியில் கடலுக்குச் செல்கிறோம்,” என்று நிமாஹ் விளக்குகிறார்.
கடலுக்குச் செல்வது எளிதானது அல்ல, ஆனால் வெப்பம் தனக்கு வேறு வழியில்லை என்கிறார் நிமா. ஆனால் இஸ்ரேலிய தாக்குதல்கள் இருக்கும் போது, அவர்கள் முகாமிலும் அவர்களின் சூடான கூடாரத்திலும் தங்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
மாலையில் அவர்கள் வீட்டிற்குத் திரும்பியதும், நிமா தனது குழந்தைகளின் உடலில் உள்ள உப்பைக் கழுவி, பின்னர் கிடைக்கக்கூடிய உணவை அவர்களுக்கு உணவளிக்க முயற்சிக்கிறார்.
“வாழ்க்கையில் இவ்வாறான நிலைமைகள் மிகவும் கடினமானவை“
காசாவில் இப்போது பஞ்சம் காணப்படுவதாக ஐ.நா வல்லுநர்கள் கூறுவதில் இருந்து தப்பித்து, மார்ச் மாத தொடக்கத்தில் நிமாஹ் வடக்கில் காசா நகரத்தில் உள்ள நாஸ்ர் பகுதியிலிருந்து டெய்ர் எல்-பாலாவுக்கு இடம்பெயர்ந்தார்.
ஆனாலும் இவ்வாறான மோதல் நிலைமைகளில் அடிப்படை தேவைகளை பெற்றுக் கொள்ளவும் தங்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொள்ளவதையும் அவர்கள் படும் இன்னல்கள் வாயிலாகவும் எவ்வளவு சிரமப்படுகின்றார்கள் என்பது புரிகின்றது.