அரியநேத்திரன் தொடர்பில் 11 ஆம் திகதி முடிவெடுக்கப்படும்; தமிழரசு கட்சியின் தலைவர் மாவை

ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளராக போட்டியிடவுள்ள தமிழரசு கட்சியின் மத்திய குழு உறுப்பினர் அரியநேத்திரன் தொடர்பில் 11 ஆம் திகதி முடிவெடுக்கப்படும் என தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

தமிழரசு கட்சி ஐனாதிபதி தேர்தல் தொடர்பில் இதுவரை எவ்வித முடிவுகளையும் மேற்கொள்ள முன்னர் அக் கட்சியின் மத்தியகுழு உறுப்பினரான அரியநேத்திரன் பொது வேட்பாளராக 2024 ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள விடயம் தொடர்பில் தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவை தொடர்பு கொண்டு வினவிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

வரும் 11.08.2024 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கட்சியின் மத்திய குழு கூடி ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் கலந்துரையாடி முடிவுகளை மேற்கொள்ளவுள்ளது. அதன் பின்னரே கட்சியின் நிலைப்பாடு தொடர்பில் அறிவிக்கப்படும். இந்நிலையில், கட்சி ஒரு நிலைப்பாட்டை எடுக்க முன்னர் கட்சியின் உறுப்பினர் பொது வேட்பாளராக போட்டியிட தீர்மானித்த விடயம் தொடர்பில் அக் கூட்டத்தில் கலந்துரையாடப்படும் எனத் தெரிவித்த அவர் பொது வேட்பாளராக அரியநேத்திரன் அறிவிக்கப்பட்ட பின்னர் என்னை வந்து சந்தித்து விடயத்தை தெரியப்படுத்தி சென்றுள்ளார் என்றும் தெரிவித்தார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button