ஆஸ்திரியா இசை நிகழ்ச்சியில் பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டம்

ஆஸ்திரியாவில் நடைபெறவிருந்த உலகப் புகழ்பெற்ற அமெரிக்க பொப் பாடகி டெய்லர் ஸ்விஃப்ட்டின் (Taylor Alison Swift) இசை நிகழ்ச்சியில் பயங்கரவாதத் தாக்குதல் நடத்த திட்டமிட்ட இருவரை ஆஸ்திரிய பாதுகாப்பு படையினர் கைது செய்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இதனையடுத்து, ஆஸ்திரியா, வியன்னாவில் அமைந்துள்ள எர்ன்ஸ்ட் ஹாப்பல் ஸ்டேடியத்தில் (Ernst Happel Stadium) மூன்று நாட்கள் நடைபெறவிருந்த இந்த இசை நிகழ்ச்சி இரத்துச் செய்யப்பட்டது.

கைது செய்யப்பட்ட இருவரது தங்குமிடத்தை சோதனையிட்டபோது, வெடிகுண்டுகள் தயாரிக்க பயன்படுத்தப்படும் இரசாயனப் பொருட்களை அந்நாட்டு பாதுகாப்பு படையினர் கைப்பற்றியுள்ளனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button