ராகுல் காந்தியின் மார்பிங் படம் பகிர்வு; ரூ.40 கோடி கேட்டு கங்கனா மீது வழக்கு

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் மார்பிங் செய்யப்பட்ட புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த நடிகையும், மக்களவை எம்பியுமான கங்கனா ரணாவத்திடம் ரூ. 40 கோடி கேட்டு மானநஷ்ட வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

சில நாள்களுக்கு முன்பு மக்களவையில் சாதிவாரி கணக்கெடுப்புப் பற்றி பேசிய போது ராகுல் காந்தியின் சாதி குறித்து அனுராக் தாக்கூர் கேள்வி எழுப்பியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதனைத் தொடர்ந்து, நடிகையும் எம்பியுமான கங்கனா ரணாவத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தலையில் குல்லா, கழுத்தில் சிலுவை மற்றும் நெற்றியில் சந்தனம், குங்குமம் வைத்தபடி ராகுல் காந்தி இருப்பதுபோன்ற எடிட் செய்யப்பட்ட புகைப்படத்தை பகிர்ந்து, அதற்கு கீழே ’யாருடைய சாதியையும் கேட்காமல் சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்த விரும்புபவர்’ என்று எழுதியிருந்தார்.

இந்த நிலையிலேயே கங்கனா மீது காங்கிரஸ் வழக்கு தொடுத்துள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button