சஜித்தின் கூட்டணியில் இணையுங்கள்: வட, கிழக்கு தமிழ் கட்சிகளுக்கு மனோ அழைப்பு

வடக்கு, கிழக்கு தமிழ் கட்சிகள் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் உருவாக்கப்பட்டுள்ள ஐக்கிய மக்கள் கூட்டணிக்கு ஆதரவளிக்க வேண்டும்.” என தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோகணேசன் அழைப்பு விடுத்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையில் உருவாக்கப்பட்டுள்ள கூட்டணிக்கான உடன்படிக்கை கைச்சாத்திடும் நிகழ்வு இன்று கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்களில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் உரையாற்றும் போதே மனோகணேசன் மேற்படி அழைப்பை விடுத்தார்.

”பௌத்தம், இந்து, இஸ்லாம், கிறிஸ்தவ மற்றும் ஏனைய மதங்களை சேர்ந்தவர்களும், சிங்களவர்களும், தமிழர்களும், முஸ்லிம்களும் இணைந்துள்ள இலங்கையர் கூட்டணியாக ஐக்கிய மக்கள் கூட்டணி உள்ளது. அனைவரும் இலங்கையர்களாக ஒன்றுக்கூட கூடிய இடமாக இந்த கூட்டணி உள்ளது.

அதேபோன்று நாட்டை கட்டியெழுப்பக் கூடிய மற்றும் பொருளாதாரம் தொடர்பில் நிபுணத்துவம் கொண்ட அணியும் எம்மிடமே உள்ளது.

வடக்கு,கிழக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள் நடைமுறைக்கு சாத்தியமான தீர்வுகளை பெற்றுக்கொள்ள இந்த மகா கூட்டணியில் இணையுமாறும் அழைப்பு விடுக்கிறேன்.” என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button