அர்ச்சுனாவை தோலில் தூக்கி வைத்து கொண்டாடிய மக்கள்: மன்னாரில் அமோக வரவேற்பு

நீதிமன்றத்தினால் நிபந்தனையின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்ட வைத்தியர் அர்ச்சுனாவிற்கு மன்னார் மாவட்ட மக்கள் அமோக வரவேற்பை வழங்கினர்.

கடந்த வெள்ளிக்கிழமை (2) இரவு மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையினுல் அத்து மீறி நுழைந்து கடமைக்கு இடையூரை ஏற்படுத்தினார் என்ற குற்றச்சாட்டில் வைத்தியர் அர்ச்சுனா கைது செய்யப்பட்டிருந்தார்.

கைது செய்யப்பட்ட வைத்தியர் சனிக்கிழமை மன்னார் நீதவான் முன்னிலையில் ஆஜர் படுத்திய போது அவரை ஏழாம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பித்தார்.

இந்த நிலையில் நேற்றைய தினம் (7) குறித்த வழக்கு விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்ட போது வைத்தியர் அர்ச்சுனா மன்னார் நீதிமன்றத்தில் முன்னிலைப் படுத்தப்பட்டார்.

வைத்திய அர்ச்சுனா சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி அண்ரன் புனித நாயகம் தலைமையிலான சட்டத்தரணிகள் மன்றில் முன்னிலையாகி இருந்தனர்.

இதன்போது, பிணையில் வைத்தியர் அர்ச்சுனா விடுதலை செய்யப்பட்டிருந்தார்.

இந்த நிலையில் மன்றில் இருந்து வைத்தியர் வெளியேறிய போது மன்னார் மாவட்ட நீதிமன்றத்திற்கு முன் ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்று கூடி அவரை வறவேற்றிருந்தனர்.

பின்னர் மன்னார் மாவட்ட மக்கள் வைத்தியரை மன்னார் பொது விளையாட்டு மைதான பகுதிக்கு அழைத்துச் சென்று மாலை அணிவித்து தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

மன்னார் – தம்பனைக்குளம் பகுதியைச் சேர்ந்த பட்டதாரியான இளம் தாய் ஒருவர் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி கடந்த 28 ஆம் திகதி உயிரிழந்தார்.

குறித்த பெண்ணின் மரணத்திற்கு விடுதியில் இருந்தவர்களின் அசமந்த போக்கே காரணம் என குற்றம் சுமத்தப்பட்டது.

இந்த நிலையிலேயே வைத்தியர் அர்ச்சுனா மன்னார் மாவட்ட வைத்தியசாலைக்கு சென்று இந்த சம்பவம் தொடர்பில் கேள்வியெழுப்பிருந்தார்.

இதனால், கடமைக்கு இடையூறு ஏற்படுத்தியதாக வைத்தியர் அர்ச்சுனா மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button