நாட்டை அநுரவிடம் ஒப்படைக்க மக்கள் தயார் – விஜித ஹேரத்!

நாட்டை அநுரவிடம் ஒப்படைக்க மக்கள் தயாராகவே இருக்கிறார்கள் என தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்றுப் பேரவை உறுப்பினரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விஜித ஹேரத் தொிவித்துள்ளாா்.

தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் அக்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளருமான அநுர குமார திசாநாயக்கவினது ஜனாதிபதி தோ்தலுக்கான கட்டுப்பணத்தினைச் செலுத்திய பின்னா் ஊடகங்களுக்குக் கருத்துத் தொிவித்த போதே அவா் இதனைக் குறிப்பிட்டாா். இவ்விடயம் தொடா்பாக அவா் மேலும் தொிவிக்கையில்,

“ஜனாதிபதி தோ்தலுக்காக எமது கட்சியின் தலைவர் தோழர் அநுர குமார திசாநாயக்கவிற்காக நாம் அனைவரும் வந்து கட்டுப்பணத்தை வைப்புச் செய்தோம். 15 ஆம் திகதி வேட்பு மனுவை ஒப்படைப்பதற்கான எல்லா ஏற்பாடுகளையும் செய்து வருகிறோம்.

எமது நாட்டை பொருளாதார ரீதியாக சீரழித்து ஊழல்மிக்க, கீழ்த்தரமான, அசிங்கமான அரசிலை முன்னெடுத்து வந்த யுகத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து நாட்டை கட்டியெழுப்புவதற்கான வேலைத்திட்டமொன்றை கொண்ட அரசியலை வெற்றிபெற செய்விக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

நாட்டின் பெரும்பான்மை மக்கள் இந்த தினம் வரும் வரை வழிமேல் விழிவைத்துப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். நிலவுகின்ற அரசியல் கலாச்சாரத்தை மாற்றியமைத்து நாட்டை அதலபாதாளத்திலிருந்து மீட்டெடுக்கின்ற வேலைத்திட்டத்தை கொண்டுள்ள அநுரவிடம் நாட்டை ஒப்படைக்க தயாராக இருக்கிறார்கள்.

தேசிய மக்கள் சக்தி நாட்டு மக்களின் வாக்குகளால் அநுரவிடம் நாட்டை ஒப்படைக்கத் தயார். இந்த செய்தியை நாங்கள் இந்த சந்தர்ப்பத்தில் நாட்டு மக்கள் அனைவருக்கும் கொடுக்கிறோம்” என விஜித ஹேரத் மேலும் தொிவித்தாா்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button