நாய்களுக்கு பயந்த சிறுத்தை: தலைதெறிக்க ஓடிய காணொளி

சிறுத்தை – நாய் இரண்டில் எது அதிக பலசாலி என்று கேட்டால் அனைவரும் சற்றும் யோசிக்காமல் சிறுத்தை என்று பதில் கூறுவோம்.

ஆனால், சில வேளைகளில் நிலைமை தலைகீழாக மாறும் என்பதற்கு சான்றாக ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.

இந்தியா, உத்தரகாண்ட் மாநிலம் நைனிடால் நகரிலுள்ள ஒரு வீட்டுக்குள் திடீரென சிறுத்தையொன்று புகுந்துள்ளது.

அப்போது அங்கிருந்த நாய் இதைப் பார்த்துவிட்டு, தனது எஜமான் வீட்டுக்குள் அந்த சிறுத்தை நுழைந்துவிடாத படி அதனை துரத்த முற்பட்டுள்ளது.

இதனைப் பார்த்து சிறிதும் பயப்படாத அந்த சிறுத்தை மீண்டும் மீண்டும் வீட்டுக்குள் வர முயற்சித்த போது, மேலும் இரண்டு நாய்கள் சேர்ந்துகொள்ள மொத்தமாக மூன்று நாய்கள் சிறுத்தையை தாக்க ஆரம்பித்தன.

நாய்களின் முன் சிறுத்தையின் முயற்சிகள் அனைத்தும் பயனற்றுப் போக, சிறுத்தை ஓடிப் போனது.

சிறுத்தை ஓடிவிட்டதாக என்பதைப் பார்க்க வீட்டின் உரிமையாளர் வெளியே வந்துள்ளார்.

சிறுத்தை ஓடிவிட்டது தெரிந்ததும் நிம்மதியடைந்துள்ளார்.

சில நேரங்களில் பலசாலிகளும் பலவீனர்களாக ஆக முடியும், அதே சமயம் ஒற்றுமையாக செயல்பட்டால் யாரையும் வீழ்த்த முடியும் என இரண்டு விதமாக இந்த வீடியோவைப் பார்க்க முடியும்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button