குழந்தை வரம் கொடுக்கும் ஆடிப்பூரம் இன்று
தமிழ் மாதங்களில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த மாதமும், ஆன்மீகமான மாதமாக இருப்பது ஆடி மாதம்.
ஆடி மாதத்தில் வரும் ஒவ்வொரு நாளும் சிறப்பு வாய்ந்த நாள் ஆகும்.
அந்த வகையில் ஆடி மாதத்தில் வரும் ஆடிப்பூரம் மிகவும் சிறப்பு வாய்ந்தது ஆகும்.
அம்மன் கோயில்களில் அம்மனுக்கு வளைகாப்பு பூஜை நடைபெற உள்ளது.
இந்த வளைகாப்பில் அம்மனுக்கு வளையல்களால் மாலை அணிவித்து சிறப்பு பூஜை நடத்தப்படும்.
இந்த வளைகாப்பில் பெண்கள் பங்கேற்பது சிறப்பானது என்று கருதப்படுகிறது.
அம்மனுக்கு அணிவித்த வளையல்களில் அணிவதால் குழந்தைப் பேறு இல்லாத பெண்களுக்கு குழந்தை உண்டாகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை ஆகும்.
ஆடிப்பூரத்தில் செய்ய வேண்டியவை
அருகிலுள்ள அம்மன் கோயிலுக்கு சென்று, அம்மனுக்கு பூஜை செய்தல்.
முழு நாள் விரதம் இருந்து, மாலை வேளையில் அம்மனுக்குப் பிரசாதம் செய்து வழிபடுதல்.
அம்மன் பாடல்களைப் பாடி, அம்மனைத் துதித்தல்.
ஏழை எளியவர்களுக்கு அன்னதானம் செய்வது மிகவும் புண்ணியம்.
இன்றைய ராசிபலன்
- மேஷம்-நன்மை
- ரிஷபம்-தாமதம்
- மிதுனம்-நிறைவு
- கடகம்-தெளிவு
- சிம்மம்-உண்மை
- கன்னி-பதவி
- துலாம்- நிம்மதி
- விருச்சிகம்-ஆசை
- தனுசு- ஆர்வம்
- மகரம்-பொறுமை
- கும்பம்-ஓய்வு
- மீனம்-இன்பம்
![]()