வாக்குச் சீட்டின் நீளம் அதிகரிப்பு: 200 மில்லியன் பொது மக்களின் பணம் மேலதிகச் செலவு

இலங்கைத்தீவில் எதிர்வரும் செப்ரெம்பர் மாதத்தில் இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்குச் சீட்டின் நீளம் 27.5 அங்குலங்களாக இருக்கும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

கடந்த முறை வாக்குச் சீட்டின் நீளம் 26.5 அங்குலங்களாக காணப்பட்டது.

அதன்படி, வாக்குச் சீட்டை அரை அங்குலத்தை அதிகரிப்பதாயின் பொது மக்களின் 200 மில்லியன் ரூபாயை மேலதிகமாக செலவிட நேரிடும் எனவும் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இலங்கையில் 78 அரசியல் கட்சிகள் தேர்தல் ஆணைக்குழுவில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதேவேளை, நேற்று (05) வரையில், இவ்வருட ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் 17 வேட்பாளர்களுக்கு கட்டுப்பணம் வைப்பிலிடப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

மேலும், ஆகஸ்ட் மாதம் 15ஆம் திகதி வேட்புமனுக்கள் ஏற்கப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button