முச்சந்தி

காலியில் இணையவழி நிதி மோசடி; வெளிநாட்டு பிரஜைகள் 08 பேர் கைது

காலி உடுகம வீதியில் அமைந்துள்ள தற்காலிக தங்குமிடத்தில் இணையவழி நிதி மோசடியில் ஈடுபட்ட வெளிநாட்டு பிரஜைகள் 08 பேர் காலித் துறைமுக பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காலி பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற இரகசிய தகவலுக்கமைய  நேற்று வியாழக்கிழமை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் போது சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதானவர்களில் 24 முதல் 36 வயதுக்குட்பட்ட 06 சீன பிரஜைகளும் கஸகஸ்தான் மற்றும் கிர்கிஸ்தானை சேர்ந்த இரண்டு நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களிடம் இருந்து 09 கணனிகள், 73 கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் பல சிம் அட்டைகளை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காலி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button