மாகாண சபைத் தேர்தல்- தனிநபர் பிரேரணையை நிறைவேற்றுவதற்கு உறுதியளித்த ரணில்; ரணில்-சுமந்திரன் முக்கிய சந்திப்பு

மாகாண சபைத் தேர்தல் தொடர்பாக தமிழரசு கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனால் சமர்ப்பிக்கப்பட்ட தனிநபர் பிரேரணையை இம்மாதம் இறுதி வாரத்தில் நாடாளுமன்றில் நிறைவேற்ற ஒத்துழைப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதியளித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனுக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று இடம்பெற்ற போதே ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு உறுதியளித்துள்ளார்.

இதேவேளை ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர்தல்கள் நிறைவடைந்த உடனேயே மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்தவும் ஜனாதிபதி உறுதியளித்துள்ளதாக சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அதிகாரப் பகிர்வு தொடர்பான தொடர்ச்சியான கலந்துரையாடல்களின் ஒருகட்டமாகவே இந்த சந்திப்பு அமைந்திருந்ததாகவும் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

மாகாணசபைத் தேர்தலைப் பழைய முறையில் நடத்தும் வகையிலேயே சுமந்திரன் குறித்த பிரேரணையை சமர்ப்பித்துள்ளார்.

அத்துடன் நேற்று நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் குறித்த பிரேரணையை நாடாளுமன்ற ஒழுங்கு பத்திரத்தில் சேர்ப்பதற்கு, ஜனாதிபதி அறிவுறுத்துவதாகத் தெரிவித்திருந்ததாகவும் சுமந்திரன் உறுதிப்படுத்தினார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button