உலகம்

காசாவில் கொல்லப்படும் ஊடகவியலாளர்கள்; இதுவரை 125 பேர் உயிரிழப்பு – அல்ஜசீரா கடும் கண்டனம்

காசாவில் இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் அல்ஜசீராவின் இரு ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளதாக அல்ஜசீரா செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த சில காலங்களாகவே காசா போர் மற்றும் ஹமாஸ் போரில் பல ஊடகவியலாளர்கள் கொல்லப்படுகின்றனர். ஆனால் அதற்கான நியாயம் பெற்றுக்கொள்ளப்படுவதில்லை. இதனால் அல்ஜசீரா ஊடகம் தனது கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளது.

இதனால் சர்வதேச ரீதியில் பல எதிர்ப்புகளும் விமர்சனங்களும் முன்னெடுக்கப்பட்ட வண்ணமே உள்ளன.

இதனடிப்படையில், நேற்று நடத்தப்பட்ட தாக்குதலில், இஸ்மாயில் அல் கௌல் என்ற பத்திரிகையாளரும் ரமி அல் ரைவ் எனப்படும் புகைப்பட ஊடகவியலாளரும் கொல்லப்பட்டுள்ளனர்.

மேற்கு காசாவின் சட்டி அகதிமுகாம் பகுதியில இவர்கள் பயணித்துக்கொண்டிருந்த காரின் மீது தாக்குதல் இடம்பெற்றுள்ளது. இது திட்டமிடப்பட்ட தாக்குதலா எனவும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இஸ்ரேலினால் படுகொலை செய்யப்பட்ட ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியேயின் வீட்டிற்கு அருகில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

2023 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 7ஆம் திகதி ஹமாஸ் – இஸ்ரேல் போர் தொடங்கியதில் இருந்து கிட்டத்தட்ட 125 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளதாக என தற்போது அல்ஜசீரா தகவல் வெளியிட்டுள்ளது.

இதை பத்திரிகையாளர்களைப் பாதுகாப்பதற்கான குழு (The Committee to Protect Journalists) உறுதி செய்துள்ளது. இந்த 125 ஊடகவியலாளர்களில் 120 பலஸ்தீனியர்கள், 2 இஸ்ரேலியர்கள் மற்றும் 3 லெபனான் பத்திரிகையாளர்கள் அடங்குவர்.

இது தவிர, ஊடகவியலாளர்களில் 8 பேர் காயமடைந்து உள்ளனர். 9 பேர் காணாமலோ அல்லது சிறைபிடிக்கப்பட்டோ உள்ளனர் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்கா (358), கிரேட் பிரிட்டன் (281), பிரான்ஸ் (221) மற்றும் ஜெர்மனி (102) ஆகிய நாடுகள் அதிக எண்ணிக்கையிலான ஊடகவியலாளர்களை இதுவரை இஸ்ரேலுக்கு அனுப்பியுள்ளதாகவும் கடந்த வருடம் செய்திகள் வெளியாகியிருந்தன.

மேலும், கடந்த நவம்பர் கால பகுதியில் அல்ஜசீராவின் ஊடகவியலாளர் வயெல் டாடோசின் குடும்பத்தினர் கொல்லப்பட்டமைக்கு அல்ஜசீரா தனது கண்டனத்தை வெளியிட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இதுவரை கொல்லப்பட்ட ஊடகவியலாளர்களின் விபரம் வருமாறு…

Oruvan

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.