இஸ்மாயில் கொலை; உலகப் போராக உருவெடுக்குமா?
ஈரானில் புதிய ஜனாதிபதி பதவியேற்கும் நிகழ்வில் கலந்துக்கொள்வதற்காக சென்றிருந்த ஹமாஸின் உயர்மட்ட அரசியல் தலைவர் இஸ்மாயில் ஹனியே (Ismail Haniyeh) டெஹரான் நகரில் காணப்படக்கூடிய அவருடைய வீட்டினுள் கொல்லப்பட்டமை , உலகப் போராக மாறுமா என்ற சந்தேகம் சர்வதேச அரசியல் ஆய்வாளர்களிடம் ஏற்பட்டுள்ளது.
ஈரானின் புதிய ஜனாதிபதியான மசூத் பெஷேஷ்கியனின் பதவியேற்பு விழாவில் கலந்து கொண்ட பின் இஸ்மாயில் ஹனியே அவர் தங்கியிருந்த வீட்டில் கொல்லப்பட்டார்.
இஸ்மாயில் ஹனியே , ஹமாஸ் அமைப்பின் அரசியல் தலைவர், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் மோதல்களைத் தீர்ப்பதற்கு மத்தியஸ்தராக பெரும் பங்காற்றியவர் என மிதவாத விமர்சகர்களால் பாராட்டப்பட்டார்.
அத்தகைய தலைவர் ஈரான் தலைநகரில் சிறப்பு இராஜதந்திர நிகழ்வின் போது படுகொலை செய்யப்பட்டிருப்பது ஈரானைப் போருக்கு இணைக்கும் மிகவும் தீவிரமான முயற்சி என்று விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
இந்த கொலைக்கு இலங்கை, சீனா, ரஷ்யா உள்ளிட்ட பல சக்திவாய்ந்த நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.