உண்மையான தாராள பிரபு; 100 குழந்தைகளுக்கு தந்தை – யார் தெரியுமா?

பிரபல சமூக வலைதளமான டெலிகிராமின் இணை நிறுவனர் 12 நாடுகளில் உள்ள 100 குழந்தைகளுக்கு தந்தையாவார்.

உலகம் முழுவதும் பலரால் பிரபலமாக பயன்படுத்தப்படும் சமூக வலைதள செயலிகளில் டெலிகிராம் முக்கியமானதாகும்.

அதன் இணை நிறுவனரும் தலைமை அதிகாரியும் ரஷ்யாவை சேர்ந்த பாவெல் துரோவ் (Pavel Durov).

அவருக்கு 39 வயதாகின்ற போதிலும் இன்னும் திருமணமாகவில்லை. ஆனால் விந்தணு தானம் மூலமாக உலகம் முழுவதும் உள்ள 100 குழந்தைகளுக்கு உயிரியல் தந்தையாக உள்ளதாக பாவெல் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பில் கருத்து தெரிவித்த அவர், முதன்முதலில் 15 ஆண்டுகளுக்கு முன்னர் தனது நண்பர் ஒருவர் குழந்தையின்மையால் வருத்தத்தில் இருந்ததால் விந்தணு தானம் செய்ததாகவும், அதன்பின்னர் மருத்துவர்கள் விந்தணு தானத்தின் அவசியம் குறித்து கூறியதால் தொடர்ந்து விந்தணு தானம் செய்து வருவதாகவும் கூறியுள்ளார்.

Oruvan

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button