சீனாவில் கொட்டித் தீர்க்கும் கன மழை; வெள்ளத்தில் சிக்கி 7 பேர் பலி

சீனாவின், மத்திய பகுதியான ஹூனான் மாகாணத்தில் பெய்து வரும் கன மழையினால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 7 பேர் பலியாகியுள்ளதோடு மூவர் காணாமல் போயுள்ளனர்.

இக் கனமழையின் காரணமாக 900 வீடுகள், 1345 வீதிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

காணாமல் போயுள்ளவர்களை மீட்கும் பணி தொடர்ந்து வருகின்ற நிலையில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுதற்கென 5400 மீட்பு குழுவினர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

சீனாவின் பல பகுதிகளில் வெப்ப அலை வீசி வந்தாலும், சில பகுதிகளில் கன மழை தொடர்ந்து வருகின்றது.

கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் சீனாவில் சில பகுதிகளில் 645மி.மீ மழை பெய்துள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி 15 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

Oruvan

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button