காட்டுப் பகுதியில் மரத்தில் சங்கிலியால் கட்டி வைக்கப்பட்டிருந்த பெண்
இந்தியா, மகாராஷ்டிரா மாநிலம், சிந்துதுர்க் மாவட்டத்திலுள்ள காட்டுப் பகுதியொன்றில், 50 வயது மதிக்கத்தக்க பெண்ணொருவரை மரத்தில் சங்கிலியால் கட்டி வைத்திருந்த சம்பவமொன்று நடந்துள்ளது.
ஆடு மேய்த்துக்கொண்டிருந்த நபரொருவர் காட்டுக்குள் பெண்ணொருவரின் அழுகைச் சத்தம் கேட்டு அங்கு பார்த்தபோது குறித்த பெண் மரத்துடன் சங்கிலியால் கட்டப்பட்டிருந்துள்ளார்.
சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில், அமெரிக்க கடவுச்சீட்டின் நகல், தமிழக முகவரியுடன் இருக்கும் ஆதார் அட்டை, மருந்துகளுக்கான பற்றுச்சீட்டு ஆகியவை பெண்ணிடமிருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளன.
அந்தப் பெண்ணை மீட்ட பொலிஸார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
தற்போது அவரது உடல் நலம் நன்றாக உள்ளதாகவும் அவர், மன ரீதியான பிரச்சினைக்கு ஆளாகியிருப்பதாகவும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.
அவரது கடவுச் சீட்டில் லலிதா காயி என பெயர் இருந்துள்ளது. மேலும் அவரது விசாவும் முடிவடையும் காலகட்டத்தில் இருந்துள்ளது.
இவ்வாறிருக்க அவரது ஆதார் அட்டையிலிருந்த முகவரியைத் தேடி பொலிஸ் குழுவொன்று தமிழ்நாட்டுக்கு சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.