நாடாளுமன்றம் கலைக்கப்படும் திகதி; நியமிக்கப்படும் இடைக்கால அமைச்சரவை
ஜனாதிபதித் தேர்தலை நடாத்த 24 மணி நேரத்திற்கு முன்னர் நாடாளுமன்றத்தை கலைக்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகின்றன.
தற்போது தேர்தல்கள் ஆணைக்குழு மூலம் செப்டம்பர் மாதம் 21ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, செப்டம்பர் 20ஆம் திகதி நள்ளிரவில் இவ்வாறு அவசரமாக நாடாளுமன்றத்தை கலைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அவ்வாறு நடந்தால் ஜனாதிபதித் தேர்தலை நடாத்தி முடிக்கும் வரையில் மற்றும் அதன் பின்னர் பொதுத் தேர்தலை நடத்தும் வரையில் தற்போது காணப்படும் அமைச்சரவையை, இடைக்கால அமைச்சரவையாக செயற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டிவரும். காபந்து அரசாங்கத்தை அமைக்க நேரிடும்.
இவ்வாறான பின்னணியில் புதிதாக நியமிக்கப்படும் ஜனாதிபதிக்கு புதிய அமைச்சரவையை நியமிக்க முடியாத நிலை ஏற்படுவதால் பொதுத் தேர்தலை நடத்தும் வரையில் இடைக்கால அமைச்சரவையுடனேயே செயற்பட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
புதிய ஜனாதிபதி ஒருவர் நியமிக்கப்பட்டாலும் கூட நாட்டினுள் ஒரு குழப்ப நிலையை உருவாக்க இவ்வாறு ஜனாதிபதி தேர்தலுக்கு ஒரு நாள் முன்னர் நாடாளுமன்றத்தை கலைக்க நடவடிக்கை எடுப்பதாக எதிர்க்கட்சிகள் கருத்து தெரிவித்து வருகின்றன.
பதில் பொலிஸ்மா அதிபர் ஒருவரை நியமிக்க முடியவில்லை எனின், ஜனாதிபதி தனது கடமைகளை மீறுவதாக எடுத்துக்கொள்ளப்படும் என்பதை கருத்தில் கொண்டு ஜனாதிபதி பதவியிலிருந்து இராஜினாமா செய்ய வேண்டும் என எதிர்க்கட்சி அமைச்சர்கள் மற்றும் சட்டத்தரணிகள் தெரிவித்து வருகின்றனர்.
இது தொடர்பில், நாடாளுமன்றத்தில் கருத்து தெரிவித்த எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச,ரவூப் ஹக்கீம் மற்றும் தயாசிறி ஜயசேகர ஆகியோர், அவசரமாக பதில் ஜனாதிபதியொருவரை நியமிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்தனர்.
நீதிமன்ற உத்தரவிற்கேற்ப பதில் பொலிஸ்மா அதிபர் உருவரை நியமிக்க முடியவில்லை எனின் ஜனாதிபதி தனது பதவியில் இருந்து இராஜினாமா செய்ய வேண்டும் என ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் தன்னுடைய முகப்புத்தகத்தில் பதிவிடப்பட்டிருந்தது.
மேலும், ஜனாதிபதித் தேர்தல் இடம்பெறும் திகதியை அறிவித்த அன்றைய தினமே, ரணில் விக்கரமசிங்க தேர்தல் வேட்பாளருக்கான கட்டுப் பணத்தை செலுத்தியமை தற்போது சட்ட ரீதியிலான கேள்விகளை எழுப்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.