டொராண்டோ நகரசபையில் உறுப்பினர் போட்டியிடும் தமிழர்: வேட்பு மனு தாக்கல்

வெற்றிடமாக உள்ள டொராண்டோ நகரசபை உறுப்பினர் பதவிக்கு தமிழர் ஒருவரும் போட்டியிடுகிறார்.

இதன்படி, Don Valley மேற்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் நியமனங்கள் கடந்த திங்கட்கிழமை (22) ஆரம்பித்தது.

இதன்படி, Evan சாம்பசிவம் என்ற தமிழரும் தேர்தலில் போட்டியிடுவதற்கு வேட்பு மனு தாக்கல் செய்துள்ளதாக கூறப்படுகின்றது.

இவர் முன்னதாக நகரசபை வேட்பாளராகவும் போட்டியிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், குறித்த தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் செப்டம்பர் 19ஆம் திகதி வரை தமது வேட்பு மனுக்களை தாக்கல் செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தொகுதிக்கான இடைத்தேர்தல் நவம்பர் மாதம் 04ஆம் திகதி நடைபெறுகிறது. முன்கூட்டிய வாக்குப்பதிவு ஒக்டோபர் 26, 27ஆம் திகதிகளில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த தொகுதியின் நீண்ட கால நகர சபை உறுப்பினர் Jaye Robinson புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மரணமடைந்ததை அடுத்து இந்த வெற்றிடம் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *