உலகம்

கருக்கலைப்பின்போது உயிரிழந்த பெண்; உடலை ஆற்றில் வீசிச் சென்ற காதலன்

இந்தியா, மகாராஷ்டிராவிலுள்ள புனே மாவட்டத்தைச் சேர்ந்த பெண்ணொருவர் அவரது கணவரைப் பிரிந்து காதலருடன் வாழ்ந்து வந்த நிலையில் கர்ப்பமடைந்துள்ளார்.

இந்நிலையில், குழந்தையை கலைப்பதற்கு குறித்த பெண்ணை மருத்துவமனையில் அனுமதித்துள்ளார் அவரது காதலர்.

கருக்கலைப்பின் போது அந்தப் பெண் துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்தமையால் குறித்த பெண்ணின் உடல் அவரது காதலரிடம் ஒப்படைக்கப்பட்டது.

உயிரிழந்த பெண்ணுக்கு ஏற்கனவே 5 மற்றும் 2 வயதுடைய இரு பிள்ளைகள் இருக்கின்றனர்.

இந்நிலையில் உயிரிழந்த கர்ப்பிணியின் உடலை தனது நண்பனுடன் சேர்ந்து இந்திரயாணி என்ற ஆற்றில் வீசியுள்ளார் அவரது காதலர்.

அழுது கொண்டிருந்த பெண்ணின் இரண்டு பிள்ளைகளையும் சேர்த்து அதே ஆற்றில் தள்ளிவிட்டு ஊர் திரும்பியுள்ளனர்.

தனது மகளை காணவில்லை என்று உயிரிழந்த பெண்ணின் தாயார் அளித்த புகாரின் அடுத்தே இந்த விடயம் வெளியுலகுக்கு தெரிய வந்துள்ளது.

பெண்ணின் உடலை ஆற்றிலிருந்து மீட்ட பொலிஸார் குழந்தைகள் இருவரையும் தேடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.