சிறுவர்களின் நோய் எதிர்ப்பு சக்தி ஆபத்தில்
உலகளாவிய ரீதியில் சிறுவர்களின் நோயெதிர்ப்பு சக்தி குறைவடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
உலக சுகாதார ஸ்தாபனம் (WHO) மற்றும் UNICEF அண்மையில் வெளியிட்ட அறிக்கையின் அடிப்படையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, உலகளாவிய ரீதியில் சிறுவர் நோய்த்தடுப்பு பாதுகாப்பு 2023 ஆம் ஆண்டு ஸ்தம்பித்துள்ளதாக குறிப்பிடப்படுகிறது.
2019 ஆம் ஆண்டு தொற்றுநோக்கு முந்தைய காலப்பகுதியுடன் ஒப்பிடும் போது, 2.7 மில்லியனுக்கும் அதிகளவான சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படாமல் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, தடுப்பூசியின் ஒரு அளவுகூட செலுத்தப்படாத சிறுவர்களின் எண்ணிக்கை 2022 ஆம் ஆண்டில் 13.9 மில்லியனாக காணப்பட்ட நிலையில் 2023 ஆம் ஆண்டில் 14.5 மில்லியனாக அதிகரித்துள்ளது.
இதன் காரணமாக அம்மை நோய் பரவும் வேகம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், 31 நாடுகளில் தடுப்பூசி செலுத்தப்படாத சிறுவர்கள் அதிக எண்ணிக்கையில் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேநேரம், 75 சதவீதத்துக்கும் அதிகமான மக்களுக்கு தடுப்பூசி செலுத்துவது குறித்து விழிப்புணர்வு இல்லை எனவும், தடுப்பூசியின் அவசியம் குறித்து பொதுமக்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும் எனவும் உலக சுகாதார ஸ்தாபனம் வலியுறுத்தியுள்ளது.
![]()