இனிப்பு பண்டத்தை கொடுத்து 4 வருடங்களாக சிறுமிகள் துஸ்பிரயோகம்: 15 பேருக்கு நீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பு

இந்தியாவின் திண்டிவனம் பகுதியில் 2019ஆம் ஆண்டு முதல் இரண்டு சிறுமிகள் கிட்டதட்ட 15 பேரால் பாலியல் ரீதியாக துன்புறுத்தல்களுக்கு இலக்கான சம்பவம் தற்போது தமிழகம் முழுவதும் பெரும் சர்ச்சையையும் பெரும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

மேலும், இரண்டு சிறுமிகளில் ஒரு சிறுமி அண்மையில் உடல் நலக்குறைவால் உயிரிழந்திருப்பதாகவும் தற்போது தெரியவந்துள்ளது.

இந்த வழக்கு விசாரணை மிக நீண்ட நேரம் இடம்பெற்றதுடன் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் 15 பேரும் குற்றவாளிகள் என தீர்ப்பளிக்கப்பட்டதோடு, ஒவ்வொருவருக்கும் 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் 32 ரூபாய் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நட்ட ஈடாகவும் வழங்குமாறு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

தற்போது இந்த வழக்கு விபரம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், இதன் பின்னணி என்ன?

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 9 வயது மற்றும் 7 வயதுடைய இரண்டு சகோதரிகள் கடந்த 2019ல் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக புகார் எழுந்தது.

இதையடுத்து விழுப்புரம் மாவட்ட குழந்தைகள் நலப் பாதுகாப்பு துறை அதிகாரிகள் நேரில் விசாரணை நடத்திய போது அந்தச் சிறுமிகளுக்கு உடல் முழுவதும் காயங்கள் இருந்துள்ளது. இதையடுத்து அவர்களை மீட்டு திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி 9 வயது சிறுமி உயிரிழந்தார்.

இது தொடர்பில் பிரம்ம தேச பொலிஸார் தொடர்ந்து விசாரணை நடத்திவந்த நிலையில், பாட்டியின் பாராமரிப்பில் இருந்த குறித்த சிறுமிகளுக்கு மிட்டாய் வாங்கிக்கொடுத்து ஏமாற்றி, அவர்களின் தாய்மாமா, தாத்தா மற்றம் உறவினர்களான 15 பேர் இணைந்து பாலியல் துஸ்ப்பிரயோகத்தில் ஈடுபட்டமை தெரியவந்துள்ளது.

Oruvan

இவர்கள் தொடர்ந்து 5 மாதங்களுக்கு மேலாக இவ்வாறு குறித்த சிறுமிகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தியமையும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து சிறுமியின் தாய்மாமா, தாத்ததா உள்ளிட்ட 15பேர் மீதும் போக்சோ வழக்குப் பதிவு செய்த பிரம்மதேசம் பொலிஸார், அவர்களை கைது செய்துள்ளனர்.

இந்த வழக்கு விசாரணை விழுப்புரம் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வந்தது. இந்தநிலையில் விசாரணை முடிந்து இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டது.

இதன்போதே மேற்படி தீர்ப்பளிக்கப்பட்டது. எதுஎவ்வாறாயினும் இனிப்பு பண்டங்களை வழங்கி சிறுவர்கள் மீது இவ்வாறான வன்முறைகளை திணிப்பது கண்டிக்கதக்கவிடமாகும்.

Oruvan

அந்த விடயம் தொடர்பாக தற்போது சமூக வலைத்தளங்களில் பலரும் தமது கண்டனங்களை தெரிவிப்பதோடு இவர்களுக்கு வழங்கப்பட்ட தண்டனை தொடர்பில் தங்களது ஆதரவுகளை தெரிவித்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

இந்த சம்பவம் தொடர்பில் குறித்த வழக்கு தொடர்பில் சிறுமிகள் தொடர்பில் ஆஜரான வழக்கறிஞர் கூறும் மேலதிக விபரங்களை கீழ்காணும் காணொளியில் காணலாம்.

(காணொளி) நன்றி – தந்தி தொலைக்காட்சி

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button