இலங்கையர்களுக்கு இலவச விசா; தாய்லாந்தில் இன்று முதல் நடைமுறை

இலங்கை உட்பட 93 நாடுகளைச் சேர்ந்த பயணிகள் விசா இன்றி நாட்டுக்குள் பிரவேசிப்பதற்கு தாய்லாந்து இன்று (15) முதல் அனுமதி வழங்கியுள்ளது.
இதன்படி, இலங்கையர்கள் விசா இன்றி தாய்லாந்திற்குள் பிரவேசிக்கும் முதல் சந்தர்ப்பம் இதுவாகுமென தெரிவிக்கப்படுகிறது.
தாய்லாந்தின் உள்விவகார அமைச்சினால் அறிவிக்கப்பட்டுள்ள புதிய கொள்கைகளின் அடிப்படையில், விசா இன்றி நாட்டில் தங்கியிருக்கும் காலம் 30 முதல் 60 நாட்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், நாட்டுக்குள் பிரவேசிக்கும் சுற்றுலா பயணிகள் உள்ளிட்ட அனைத்து நபர்களும் பணம், தங்குமிடம் மற்றும் நாடு திரும்புவதற்கான அல்லது வேறு நாடுகளுக்கு செல்வதற்கான ஆவணங்களை வைத்திருக்க வேண்டுமெனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த திருத்தமானது சுற்றுலாப் பயணிகள் மற்றும் குறுங்கால வணிகப் பயணிகளுக்கும் பயனளிக்கும் என தாய்லாந்து உள்விவகார அமைச்சின் ஊடகத் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, தாய்லாந்து இந்த வருடம் சுற்றுலாப்பயணிகளின் வருகையை 35 வீதம் அதிகரித்துள்ளதுடன், 24 பில்லியன் அமெரிக்க டொலரை வருமானமாக ஈட்டியுள்ளது.
இதன்படி, இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் சீனா, மலேசியா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் பாரியளவில் தாய்லாந்துக்குள் பிரவேசித்துள்ள நிலையில், ஆண்டுதோறும் சுமார் 350,000 இலங்கையர்கள் தாய்லாந்திற்கு பயணம் செய்வதாக தெரிவிக்கப்படுகிறது.
![]()