உலகம்
3 இலட்சம் பலஸ்தீனியர்கள் காஸாவிலிருந்து வெளியேறினர்: சுட்டுக் கொல்லப்படுவதாக மக்கள் குற்றச்சாட்டு
இஸ்ரேல் – பலஸ்தீனத்துக்கு இடையிலான போர் தீவிரமடைந்து வருகின்றது.
இந்நிலையில் இஸ்ரேலிய இராணுவம் அனைத்து பலஸ்தீனியர்களையும் காஸா நகரை விட்டு வெளியேறுமாறு உத்தரவிட்டிருந்தது. இதன்படி 300,000 பலஸ்தீனியர்கள் காஸா நகரத்தை விட்டு வெளியேறியுள்ளனர்.
காஸா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் இதுவரையில் 38,345 பேர் கொல்லப்பட்டுள்ளதோடு, 88,295 பேர் காயமடைந்துள்ளனர்.
மேற்படி, இஸ்ரேல் இராணுவம் பலஸ்தீனியர்களை காஸா நகரத்தை விட்டு வெளியேற வேண்டும் என்று கட்டாயப்படுத்தி வந்த நிலையில், அவர்கள் வெளியேறும்போது இஸ்ரேல் இராணுவத்தினரால் சுட்டுக்கொல்லப்படுவதாக காஸா மக்கள் கூறுகின்றனர்.
இந்த அறிவிப்பைத் தொடர்ந்து தற்போது 300,000 பலஸ்தீனியர்கள் வெளியேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.