சவுதி எயார்லைன்ஸ் விமானத்தில் தீ விபத்து; 10 பயணிகள் காயம்

பாகிஸ்தான் பெஷாவர் விமான நிலையத்தில் சவுதி எயார்லைன்ஸ் விமானம் தரையிரங்கும் போது திடீரென தீப்பிடித்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த தீ விபத்தில் 10 பயணிகள் காயமடைந்துள்ளதுடன் விமான ஆணையம் மற்றும் தீயணைப்பு படையினர் இணைந்து தீயை அணைத்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தரையிறங்கும் கருவியில் ஏற்பட்ட கோளாறு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

குறித்த விமானத்தில் 276 பயணிகள் 21 பணியாளர்கள் பயணித்துள்ளனர். இதில் 10 பயணிகள் காயமடைந்துள்ளதுடன் ஏனையவர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button