முச்சந்தி

வடக்கில் வைத்தியர்கள் புறக்கணிப்பு: வைத்தியசேவைகள் முற்றாக பாதிக்கும் சாத்தியம்

வட மாகாணத்தில் உள்ள அனைத்து அரச வைத்தியசாலை வைத்தியர்களும் இன்று (8) ஒரு நாள் பனிப் புறக்கணிப்பை மேற்கொள்ள உள்ளனர்.

இதனால் வைத்திய சேவைகள் முற்றாக பாதிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, இன்று காலை எட்டு மணி முதல் நாளை காலை எட்டு மணி வரை வைத்தியர்கள் உயிர் காக்கும் அவசர சிகிச்சைகளில் மாத்திரமே ஈடுபடுவர் என அரசவைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

யாழ் மாவட்டத்தில் உள்ள சாவச்சேரி ஆதார வைத்திய சாலையில் புதிதாக தற்காலிகமாக நியமிக்கப்பட்ட வைத்திய அத்திட்சகாரினால் அங்கு கடமையாற்றும் வைத்தியர்களின் பாதுகாப்பிற்கு ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், வைத்திய அத்திட்சகாரின் தாபன விதி கோவைகளுக்கு மாறான நடைமுறைகளுக்கு எதிராகவும், அவரின் அப்பட்டமான விதிமுறை மீறல்களுக்கு எதிராக உடனடி நடவடிக்கை எடுக்க தவறியமைக்காகவும், பாதிக்கப்பட்டுள்ள வைத்தியசாலை வைத்தியர்களுக்கு சார்பாகவும வட மாகாணத்தில் உள்ள அனைத்து அரச வைத்தியசாலை வைத்தியர்களும் இந்தப் பனிப் புறக்கணிப்பை மேற்கொள்ள உள்ளனர்.

எவ்வாறாயினும், சாவச்சேரி ஆதார வைத்திய அத்தியட்சகராகத் கடமையாற்றும் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு ஆதரவாக மக்கள் களமிறங்கியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button