வனிந்துவின் இடத்தில் ஹர்திக் பாண்டியா

டி20 உலகக் கிண்ண இறுதிப் போட்டிக்குப் பின் ஹர்திக் பாண்டியா சிறந்த இருபதுக்கு இருபது சகல துறை (all rounder) வீரராக பட்டம் வென்றுள்ளார்.

ஐசிசி ஆடவர் டி20 உலகக் கிண்ணத் தொடரில் ஹர்திக் பாண்டியாவின் சிறப்பான ஆட்டம், சமீபத்திய ஐசிசி டி20 கிரிக்கெட்டின் தரவரிசைப் புதுப்பிப்புகளில் அவரை முதலிடத்துக்கு கொண்டுவந்துள்ளது.

ஹர்திக் பாண்டியா இரண்டு இடங்கள் முன்னேறி, முதல் இடத்தில் உள்ள இலங்கை அணி வீரர் வனிந்து ஹசரங்கவுடன் ஆடவர் டி20 சகல துறை (all rounder) வீரராக இணைந்துள்ளதாக ஐசிசி தெரிவித்துள்ளது.

இந்நிலையில், டி20 சகல துறை தரவரிசையில் முதல் 10 இடங்களுக்குள் அதிக நகர்வு ஏற்பட்டுள்ளது.

மார்கஸ் ஸ்டோனிஸ், சிக்கந்தர் ராசா, ஷாகிப் அல் ஹசன் மற்றும் லியாம் லிவிங்ஸ்டன் ஆகியோர் ஒரு இடம் முன்னேறியுள்ளனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button