கவிதைகள்

“அழகாகப் பாடுகிறாய்” …. கவிதை … முல்லை அமுதன்

அழகுபடுத்துகிறேன் என
கத்தரித்து கத்தரித்து
பறக்கவே முடியவில்லை.
கூண்டுக்குள் அடைத்துவிட்டு,
அழகாகப் பாடுகிறாய்,..

பேசுகிறாய் எனச் சொல்லிச் சொல்லியே
பாடுவதைத் தடுத்துவிடுகிறீர்கள்.
தோகையினை ஒவ்வொன்றாக
பிடுங்கி உங்கள் குழந்தைகளுக்குப்
பரிசளிக்கிறீர்கள்.

காதலிகளுக்கும்,கோயிலுக்கும்
கொடுத்துவிட்டு,
வெறுமையாக நிற்கும் என்னிடம்
ஆடு என்றால்,
பாடு என்றால்,
சொல்லுங்கள்
முலைகளை அறுத்தெறிந்துவிட்டு
குழந்தைகளுக்கு
பால் எப்படி கொடுத்தது என்பதாகிவிடாதா?
சொல்லுங்கள்..

பதில் இல்லையெனினும்,
உங்கல் மகள் கேட்கிறாள்..

முல்லைஅமுதன்.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *