பலதும் பத்தும்

வெங்காயத்தில் காணப்படும் கருப்புப் பூஞ்சை நச்சுத்தன்மை கொண்டதா?

வெங்காயத்தில் கருப்பு புகை போன்ற கோடுகள் இருப்பது பலருக்கும் தெரியும். அப்படிப்பட்ட இந்த வெங்காயத்தை சாப்பிடலாமா இல்லையா என்பதை பலரும் அறிந்துகொள்ள வேண்டும்.

வெங்காயத்தில் காணப்படும் கருப்புப் பூஞ்சை நச்சுத்தன்மை கொண்டதா? | Is The Black Fungus Found On Onions Toxic

வெங்காயத்தில் உள்ள பூஞ்சை

வெங்காயம் சமையலறையில் ஒரு முக்கியப் பொருளாகும், இது பல்வேறு உணவுகளில் பயன்படுத்தப்படுகிறது.

சிலர் வெங்காயத்தை வாங்கி அதை சேமித்து வைப்பார்கள். நீங்கள் வெங்காயம் வாங்கும் போது எப்போதும் அதில் பூஞ்சை அல்லது கருப்பு கோடுகள் இருந்தால் அதை கவனித்து வாங்குவது அவசியம்.

இந்த கருப்பு கோடுகள் உள்ள வெங்காயம் நம் ஆரோக்கியத்திற்கு ஆபத்தானதா என்பது தற்போது பலரின் கேள்வி.

வெப்பநிலையில் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகள் வெங்காயம் போன்ற காய்கறிகளில் பூஞ்சை வளர்ச்சியை ஏற்படுத்துகின்றன.

கருப்பு கோடுகள்

வெங்காயத்தை உரிக்கும்போது கருப்பு தூசி போன்ற புள்ளிகள் பெரும்பாலும் தோன்றும். இவை கைகளில் ஒட்டும் தன்மையுடன் இருக்கும். இவை பார்க்க மண் போல புகை போல இருக்கும்.

அதாவது மிகவும் மெல்லிய துணிக்கைகளாக இருக்கும். உண்மையில் அவை பூஞ்சைகளாகும் .மண்ணிலும் வெங்காயத்திலும் காணப்படும் ஆஸ்பெர்கிலஸ் நைகர் என்ற பூஞ்சையால் இந்த கருப்பு புகை போன்ற கோடுகள் வெங்காயத்தில் வருகின்றன.

வெங்காயத்தில் காணப்படும் கருப்புப் பூஞ்சை நச்சுத்தன்மை கொண்டதா? | Is The Black Fungus Found On Onions Toxic

இந்த கோடுகள் வெங்காயத்தின் வெளிப்புறத்தில் இருந்தால் அதை கழுவிவிட்டு சாப்பிடலாம். ஆனால் உட்புறத்தில் இருந்தால் அதை பயன்படுத்தாமல் இருப்பது நல்லது.

வேறு வழி இல்லாமல் சமைத்தால் சிலருக்கு இது வாந்தி, குமட்டல், தலைவலி, வயிற்று வலி மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற ஒவ்வாமை எதிர்வினைகளை உண்டாக்கக்கூடும்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button