புரட்சியை ஏற்படுத்தும் சீன விஞ்ஞானிகள்; AI பாலியல் பொம்மைகள் ; விரைவில் சந்தைக்கு

மனித படைப்பாற்றல் புதிய தொழில்நுட்பங்களுக்கு வழிவகுத்தது. அவை முக்கியமான தேவைகளைப் பூர்த்தி செய்கின்றன. ஆனால் தற்போது மாறிவரும் தொழில்நுட்பம் மனித ஆசைகளை நிறைவேற்றுவதாக அமைகின்றது.

உயிர்வாழ்வதற்கான ஆரம்பகால கருவிகள் முதல் உலகளவில் நம்மை இணைக்கும் இன்றைய ஸ்மார்ட்போன்கள் வரை, தொழில்நுட்பம் சிக்கல்களைத் தீர்ப்பதுடன், புதிய அனுபவங்களை வழங்குகிறது.

தற்போது, ​​ஒவ்வொரு துறையிலும் புதிய தொழில்நுட்பமான செயற்கை நுண்ணறிவு (AI) ஆதிக்கம் செலுத்திவருவதுடன், பாலியல் பொம்மை (sex doll) தொழிலையும் மாற்றியமைக்க உள்ளது.

இந்த முன்னேற்றம் AI தொழில்நுட்பத்துடன் கூடிய துணைகளை உருவாக்குவதில் கவனம் செலுத்துகின்ற நிலையில், குறித்த பொம்மைகளினால் பயனர்களுடன் பேசவும் தொடர்பு கொள்ளவும் முடியும்.

இந்த பொம்மைகள் எவ்வாறு தொடர்பு கொள்கின்றன என்பதை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு, மேலும் உயிரோட்டமான மற்றும் ஈர்க்கக்கூடிய வகையில் உருவாக்கப்படுகின்றன.

சீன விஞ்ஞானிகள் மற்றும் பொறியியலாளர்கள் ChatGPT போன்ற தொழில்நுட்பத்தை பாலியல் பொம்மைகளுக்கு பயன்படுத்துகின்றனர்.

இதன்படி, ஷென்சென் நகரில் பாலியல் பொம்மைகளின் முக்கிய தயாரிப்பாளரான ஸ்டார்பெரி டெக்னாலஜி நிறுவனம் தற்போது செயற்கை நுண்ணறிவு மூலம் தனது தயாரிப்பை மேம்படுத்துகிறது.

ஆண் அல்லது பெண் வடிவங்களில் கிடைக்கக்கூடிய, முன்னோடியில்லாத திறன்களைக் கொண்ட இந்த பொம்மைகள் விரைவில் சந்தைக்கு வரவுள்ளன.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button