கவிதைகள்

பிரார்த்தனைகள்….. (கவிதை) முல்லை அமுதன்

கடவுளிடம்
கோபப்பட்டு ஏன்
தரிசனம் பெறாமல் செல்கிறாய்.
உண்மைதான்.

உனக்கு  அவை பிரசாதம்.
எனது பிரார்த்தனைக்கான
வரங்கள் தரப்படாத நிலையில்,
கடவுளே கேட்டுப்பெற்றவைகளே
அனேகமாகப்பட்டன.

அது தான் காத்திருக்காமல் செல்கிறேன்.
காதலித்தேன்..
காதலி பற்றிச் சொன்னேன்.
அவனே அருகிருத்திக்கொண்டான்..
துரோகியாகிப் போன
நண்பனைப் பற்றி எடுத்துரைத்தேன்.
மக்களைப் பற்றிச் சொன்னேன்.

எனது நாடு…
எனது கிராமம்..
என்றெல்லாம் சொன்னேன்..
மாறாக,
வாழ்க்கையையே நிராகரித்துவிட்டு,
சமாதானம் சொல்கிறது.
கடவுளிடம் சொல்..

இத்தனை வருடங்களின் பிராத்தனைகள்
உண்மையெனில்,
யாவற்றையும் மீளக் கையளித்துவிடச்சொல்…
கடவுளராக நாம் இருந்து பார்ப்போம்..
வரங்களும்,
தரிசனங்களும்
நம்மிடமிருந்தே எனி கொடுக்கப்படட்டும்…

முல்லை அமுதன்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *