பலதும் பத்தும்

விருது விழாவில் மாதவன் கைக்கடிகாரம்: உலகில் 10 தான் உள்ளதாம்!

நடிகர் மாதவன் பதம்ஸ்ரீ விருதுபெரும்போது கையில் அணிந்திருந்த கடிகாரத்தின் விலை தற்போது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.

விருது விழாவில் மாதவன் கைக்கடிகாரம்

இந்திய திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் தான் மாதவன்.

கடந்த 23-ம் தேதி நடிகர் மாதவனுக்கு ‘பத்மஸ்ரீ’ விருது வழங்கப்பட்டது.

பத்மஸ்ரீ விருது (Padma Shri) என்பது இந்தியக் குடியரசால் வழங்கப்படும் நான்காவது மிக உயர்ந்த குடிமக்களுக்கான கௌரவமாகும்.

விருது விழாவில் மாதவன் கைக்கடிகாரம்: உலகில் 10 தான் உள்ளதாம்! இதன் விலை என்ன? | How Much Watch Madhavan Wore At Awards Ceremony

கலை, கல்வி, விளையாட்டு, மருத்துவம், சமூக சேவை மற்றும் அறிவியல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் இந்தியர்களுக்கும், பிற நாட்டவர்களுக்கும் இந்திய அரசால் ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்தன்று இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன.

இவ்வாண்டு பத்மஸ்ரீ விருது மாதவனுக்கு கிடைத்தது. மாதவனுடன் அவரது மனைவி சரிதா மற்றும் மகன் வேதாந்த் ஆகியோர் விழாவில் கலந்துகொண்டனர்.

மாதவனுக்கு விருதை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வழங்கி வைத்தார். விருது வழங்கும் விழாவில் மாதவன் கையில் கட்டிய இருந்த கடிகாரம் இணையத்தில் பேசுபொருளாக மாறி உள்ளது.

விருது விழாவில் மாதவன் கைக்கடிகாரம்: உலகில் 10 தான் உள்ளதாம்! இதன் விலை என்ன? | How Much Watch Madhavan Wore At Awards Ceremony

கடிகாரத்தின் விலை

அவர் அணிந்திருந்த கடிகாரம் இந்திய நிறுவனமான டைட்டன் தயாரித்த மிக அரிதான `Titan Nebula Jalsa Flying Tourbillon’ ஆகும்.

18 கேரட் Rose Gold உறை கொண்ட இந்த கடிகாரம், டைட்டனின் ஆடம்பர நெபுலா கலெக்ஷனின் கீழ் உருவாக்கப்பட்டது.

ஜெய்ப்பூரின் புகழ்பெற்ற ‘ஹவா மஹால்’ கோட்டையினால் ஈர்க்கப்பட்டு, ராஜஸ்தானின் பாரம்பரிய நுண்கலை ஓவிய பாணியில் இதன் முகப்பு (Dial) கைகளால் வரையப்பட்டுள்ளது.

விருது விழாவில் மாதவன் கைக்கடிகாரம்: உலகில் 10 தான் உள்ளதாம்! இதன் விலை என்ன? | How Much Watch Madhavan Wore At Awards Ceremony

உலகிலேயே வெறும் 10 கடிகாரங்கள் மட்டுமே இந்த மாடலில் தயாரிக்கப்பட்டுள்ளன என்பது இதன் தனிச்சிறப்பு. இந்த சொகுசு கடிகாரத்தின் மதிப்பு சுமார் 40 லட்ச ரூபாய் என்று கூறப்படுகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button