முச்சந்தி

தமிழ் பொதுவேட்பாளர் ஆதரவுக் கூட்டங்கள்: சங்காணையிலும் கொடிகாமத்திலும் நடைபெற்றது

இலங்கைத் தீவில் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப்பொதுவேட்பாளர் ஒருவரை நிறுத்தவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி தமிழ் மக்கள் பொதுச்சபை தொடர் கலந்துரையாடல்களையும் கூட்டங்களையும் நடாத்தி வருகின்றது.

அதன் தொடர்ச்சியாக கொடிகாமம் வர்த்தக சங்கத்தினருடனான கலந்துரையாடல்  இடம்பெற்றது.

இதன்பின்னர் சங்காணை கூட்டுறவுச்சங்க பிரதிநிதிகளுடனான கலந்துரையாடல் 18.06.2024 அன்று காலை இடம்பெற்றது.

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப்பொதுவேட்பாளரை நிறுத்தவேண்டியதன் அவசியம் பற்றியும் தமிழ் மக்கள் ஒன்றிணைய தவறும்பட்சத்தில் தமிழ்மக்களின் வாக்குகளும்

பலமும் சிதறும் ஆபத்துக்கள் பற்றியும் தமிழ் மக்கள் பொதுச்சபையின் சார்பாக கலந்துகொண்டோர் விளக்கமளித்தனர்.

இதன்போது கேள்வி மற்றும் பதில் உரையாடல்களும் இடம்பெற்றன. எதிர்வரும் நாட்களில் தங்களின் பங்களிப்பும் இருக்கும் என கலந்துகொள்ளும் மக்கள் அமைப்புகளின் அங்கத்தவர்கள் நம்பிக்கை வெளியிட்டுவருகின்றனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button