பிரான்ஸ் நாடாளுமன்றத் தேர்தல்: வழமைக்கு திரும்பும் நியூ கலிடோனியா

அவுஸ்திரேலியா மற்றும் பிஜி இடையில் அமைந்துள்ள நியூ கலிடோனியா 19 ஆம் நூற்றாண்டில் இருந்து பாரிஸின் ஆட்சிக்குட்பட்டுள்ளது.
இருப்பினும், இங்கு வாழும் கனாக்கு எனப்படும் பழங்குடிகள் சுயாட்சி மற்றும் சுதந்திரத்தையே விரும்புகின்றனர்.
வாக்குப்பதிவு சீர்திருத்தத்தின் மீதான வெறுப்பு பல வாரங்களாக பாரியளவிலான போராட்டமாக மாறியதை அடுத்து கடந்த மே மாதம் நடுப்பகுதியில் கலவரம் ஏற்பட்டது.
இந்த நிலையில், நியூ கலிடோனியாவின் தலைநகரான நௌமியா மீண்டும் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக பிரெஞ்சு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஐந்து வார அமைதியின்மைக்குப் பின்னர் இயல்பு நிலையை அடைவதற்கான அறிகுறியாக, நௌமியாவின் சர்வதேச விமான நிலையத்தைப் போலவே பாடசாலைகளும் கடந்த திங்கட்கிழமை முதல் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.
பிரான்ஸில் நாடாளுமன்றத் தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில், சர்ச்சைக்குரிய வாக்குச் சீர்திருத்தம் இடைநிறுத்தப்படுவதாக பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மாக்ரோன் கடந்த வாரம் அறிவித்தார்.
![]()