கவிதைகள்

“கனவில் வந்தது மாநிறப்புள்ளி..அது இதுவல்ல” …. கவிதை …. முல்லைஅமுதன்.

இந்தப் புள்ளியிலிருந்து தான்
நடக்கத்தொடங்கினேன்.
வழியில் யாரோ புள்ளி ஒன்றை எறிந்திருந்தார்கள்.
வானத்திலிருந்து வீழந்ததாகச் சொன்னார்கள்.
கோபத்தில் உமை சிவன் மீதெறிந்திருக்கலாம்…நண்பனின் கூற்று.
கனவில் வந்தது மாநிறப்புள்ளி..அது இதுவல்ல.
தொடாதே வெடித்துவிடலாம்…நண்பன் எச்சரித்தான்.
வெடிப்பது அதன் இயல்பு…தொடுவது எனபது…மனது துருதுருத்தது..
திரும்பி நடந்தேன்.
புள்ளியை எடுத்துச்செல்லேன்…மனது கட்டளையிட்டது..
மனைவி தந்த முத்தம் புள்ளியாகி மனதுள் இறங்கியிருந்தது.
அந்த புத்தத்தைக் கைகளில் ஏந்தி
புள்ளியாக்கி
பரிசளிக்கவேண்டும்..
கால்கள் நடந்தன.
வழி நெடுக
புள்ளிகள் பூக்களாக..

முல்லைஅமுதன்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *