முச்சந்தி
நேருக்கு நேர் மோதிக்கொண்ட இரண்டு லொறிகள்: சாரதிகள் உட்பட 6 பேர் பலி

இரண்டு லொறிகள் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் 6 பேர் பலி.
இந்தியா, ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்திலிருந்து பந்துமில்லி நோக்கி 10 பேருடன் லொறியொன்று சென்றுகொண்டிருந்தது.
அதேசமயம் புதுச்சேரியிலிருந்து மற்றுமொரு லொறி பீமாவரம் நோக்கி வந்துள்ளது.
இந்நிலையில் சரியாக இன்று அதிகாலை 5 மணியளவில் கிருஷ்ணா மாவட்டம் தேசிய நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக இரண்டு லொறிகளும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன.
இதில் லொறியின் சாரதிகள் உட்பட மொத்தமாக ஐந்து பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர்.
சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இன்னொருவர் உயிரிழந்தார்.
விபத்து குறித்து மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
![]()