கவிதைகள்

“புத்தனாய் இருப்பது எனி சாத்தியமில்லை” …. கவிதை …. முல்லைஅமுதன்.

குப்புற விழுந்து பின்
எழுந்து
சென்றவனை சித்தா
என்று குரல் பின்னிலிருந்து எழுந்தது.
பெயர் மறந்து வருடங்களாயிற்று.
அருகில் கேட்க பிடரி சிலிர்த்து குளிர்ந்தது.
திரும்பியபோது அவர்கள் நின்றிருந்தனர்..
மீள வந்து நட்புவட்டத்துள் இணைந்துகொள்ளேன்.
முடியவில்லை எனினும்
மறுக்கவும் முடியவில்லை.வாலிபம் சிறந்ததாகப்பட்டது.
வாழ்வு சலித்தது…
மனைவி,குழந்தை,அரண்மனை…மந்திரி பிரதானிகள்..
காதல்,காமம்…
மாலைக் கருக்கலில்
அவர்களுடன்
திரும்பினேன்..
கைகளின் இரத்தம்..
மனது முழுக்க வன்மம்..
நானே எல்லாம் என்கிற கொடூரம்..
புத்தனாய் இருப்பது எனி சாத்தியமில்லை.
இன்றுமுதல் சித்தார்த்தனானேன்.

முல்லைஅமுதன்

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *