பிரேசிலில் டெங்கு பாதிப்பு – 51 லட்சத்தை தாண்டியுள்ளது!

பிரேசிலில் இதுவரை இல்லாத வகையில் டெங்கு பாதிப்பு அதிகரித்து காணப்படுகிறது என காதார அமைச்சகம் தெரிவித்துள்ளது

அந்த வகையில் இந்த ஆண்டில் இதுவரை டெங்குவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 51 லட்சத்தை தாண்டியுள்ளது

அதன்படி சமீபத்திய தரவுகளின்படி, பிரேசிலில் 51 லட்சத்து 45 ஆயிரத்து 295 டெங்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்றும் இதுவரை டெங்குவால் 2,899 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது

மேலும் பிரேசிலில் டெங்கு காய்ச்சல் பரவி வரும் நிலையில், பிரேசிலின் சில அண்டை நாடுகளிலும் டெங்கு காய்ச்சல் அதிகமாக பரவத் தொடங்கியுள்ளது.

காலநிலை மாற்றம் போன்ற காரணிகளே டெங்கு காய்ச்சல் அதிகரிப்புக்கு காரணம் என்று சுகாதார அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *