இந்தியா

காவல் நிலையத்தில் மக்களுக்கு உதவ வழக்கறிஞர்கள்- விஜய் திட்டம்

தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் விஜய் தனது அரசியல் பயணத்தை கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கினார்.

தொடர்ந்து கட்சியின் பெயரை புதுடெல்லியில் உள்ள இந்திய தேர்தல் ஆணையத்தில் பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த் பதிவு செய்தார்.

இதைத் தொடர்ந்து கட்சிக்கு புதிய உறுப்பினர்கள் சேர்க்கை தீவிரமாக நடந்து வருகிறது. ஆன்லைனில் மட்டுமே புதிய உறுப்பினர்கள் சேர்க்கப்படுவதால் அதற்கான சிறப்பு செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இதுவரை கட்சியில் சேர்ந்துள்ள புதிய உறுப்பினர்கள் எண்ணிக்கை 1 கோடியை நெருங்கி வருகிறது.

இந்நிலையில் மக்களுக்கு சட்ட உதவி வழங்க காவல் நிலையங்களை கணக்கிட்டு தலா 2 வழக்கறிஞர்களை நியமிக்க விஜய் திட்டமிட்டுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் ஏற்கெனவே சட்ட ஆலோசனை மையம் செயல்பட்டு வரும் நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

காவல் நிலையத்திற்கு செல்லும் பொதுமக்களுக்கு த.வெ.க. வழக்கறிஞர்கள் சட்ட உதவிகளை வழங்குவார்கள். வழக்கறிஞர்கள் நியமனத்தை இந்த வாரத்திற்குள் முடித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்க வாய்ப்பு உள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *