கவிதைகள்

“ஒவ்வொரு மழைத்துளியையும் அவளுக்காகவே” … கவிதை …. முல்லைஅமுதன்.

இரவின் நட்சத்திரங்களை
எண்ணி எண்ணி தோற்றுப்போகிறேன்.
ஒவ்வொரு மழைத்துளியையும்
அவளுக்காகவே
எண்ணி எண்ணிப் பார்க்கிறேன்.
தோற்றுப்போவதைத் தவிர
வேறென்ன செய்துவிடமுடிகிறது.
ஆற்றாமையினால்
அவளிடம் போனேன்.
மழையை,நட்சத்திரங்களை எண்ணிகொண்டிருந்தாள்..
மழை தன்னை நிறுத்தி
என்னிடம்
புன்னகையைத் தந்துவிட்டு அவளிடம் சென்று மடியில் உட்கார்ந்துகொண்டது
குட்டிப்பூனையாய்.

முல்லைஅமுதன்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *