அமெரிக்காவில் அதிகரிக்கும் ஆசிய அமெரிக்கர் மீதான வெறுப்புணர்வு – ஆய்வில் தகவல்!

அமெரிக்காவில் குடியேறிய ஆசிய அமெரிக்கர்கள் மீது வெறுப்புணர்வு அதிகரித்து வருவதாக, ஆசிய அமெரிக்கன் அறக்கட்டளை நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.

ஆசிய அமெரிக்கன் அறக்கட்டளையால் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் நாடு முழுவதிலுமிருந்து 6,272 பேர் பங்கேற்றிருந்தனர்.

இதில், அமெரிக்காவில் வாழும் ஆசிய அமெரிக்கர்கள், பூர்வீக ஹவாய் மக்கள் மற்றும் அமெரிக்காவில் உள்ள பசிபிக் தீவுவாசிகள் (ஏஏஎன்எச்பிஐ) நிலை குறித்து விரிவான ஆய்வு நடத்தப்பட்டது.

இதன்போது, கடந்த 12 மாதங்களில் 32 சதவீத ஆசிய அமெரிக்கர்கள் அவதூறுகளுக்கு ஆளாகியுள்ளதாகவும், 29 சதவீதம் பேர் துஷ்பிரயோகம் மற்றும் வாய்மொழி துன்புறுத்தல்களால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

இதில், பசிபிக் தீவுவாசிகள் (ஏஏஎன்எச்பிஐ) சமூகத்தினரே பெரும் பாகுபாடுக்குள்ளாகின்றமை தெரியவந்துள்ளது.

மேலும், பெரும்பாலான ஆசிய அமெரிக்கர்கள் உடல்ரீதியான தாக்குதல் (41%) அல்லது இனம், மதம் காரணமான பாகுபாடுகளுக்கு (59%) ஆளாக்கப்படுவோம் என்ற பயத்தில் வாழ்வதாக தெரிவித்துள்ளனர்.

அதன்படி, கடந்த ஆண்டில் மூன்றில் ஒரு ஆசிய அமெரிக்கர் வெறுப்புக்கு ஆளாகியுள்ளமை தெரியவந்துள்ளது.

இந்நிலையில், இனவெறி பாகுபாட்டை குறைக்க மூன்று யோசனைகள் இந்த ஆய்வில் முன்மொழியப்பட்டன.

அவை, கே-12 பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் ஆசிய அமெரிக்கர்களின் வரலாற்றை கற்பிக்க வேண்டும், அமெரிக்க சமூகத்தில் ஆசிய அமெரிக்கர்களின் மீதான பார்வையை விசாலப்படுத்த வேண்டும் மற்றும் ஆசிய அமெரிக்கர்களை மக்கள் அடிக்கடி தொடர்பு கொள்வதற்கான அதிக வாய்ப்புகள் இருப்பதை உறுதி செய்வது முக்கியம் போன்றவை குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *